SELANGOR

மாரத்தான் போட்டியில் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட் பட 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூன் 12: ரவாங் பைபாஸ் நெடுஞ்சாலையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இரண்டாவது முறையாக நடத்தப்படும் இத்திட்டமானது 12 மற்றும் 21 கிலோ  மீட்டர்கள் பிரிவுகளை உள்ளடக்கியதாக விளையாட்டு எஸ்கோ முகமட் கைருடின் ஓத்மான் கூறினார்.

“இந்த நிகழ்ச்சி காலை 4 மணி முதல் 10 மணி வரை நீடித்தது. நாங்கள் 2,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றோம், ஆனால் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

சுறுசுறுப்பாகச் செயல்பட மக்களை ஊக்குவிக்கவும் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை மறைமுகமாக மேம்படுத்தவும் கடந்த ஆண்டு இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது என்று முகமட் கைருடின் கூறினார்.

இது போன்ற திட்டத்தின் மூலம் மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன் போட்டி நிறைந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார் அவர்.

கடந்த ஆண்டு, வியட்நாம், அமெரிக்கா, இங்கிலாந்து, தாய்லாந்து, தைவான், சிங்கப்பூர், போர்த்துகல், பிலிப்பைன்ஸ், சீனா, நெதர்லாந்து மற்றும் நேபாளம் உள்ளிட்ட 24 நாடுகளில் இருந்து சுமார் 5,000 பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


Pengarang :