SELANGOR

வீடு சீரமைப்பு உதவிக்கான ஒப்புதல் கடிதங்களை 6 குடும்பத் தலைவர்கள் பெற்றனர்

அம்பாங், ஜூன் 12: இந்த ஆண்டு அம்பாங் ஜெயா நகராண்மை கழகம், (எம்பி ஏஜே) நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தின் (பிகேகேபி) கீழ் முதல் கட்டமாக  வீடு சீரமைப்பு உதவிக்கான ஒப்புதல் கடிதங்கள் ஆறு விண்ணப்பதாரர்கள் பெற்றனர்.

இத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த நன்கொடையானது, தகுதியுடைய குடும்பத் தலைவர்களுக்கு (KIR) அவர்களின் வீடுகளை பழுது பார்ப்பதற்காக வழங்கப்படுகிறது என அம்பாங் ஜெயா நகராண்மை கழக தலைவர் டாக்டர் அனி அஹ்மட் கூறினார்.

“2023 ஆம் ஆண்டில், அபிவிருத்தி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் (KPKT) அம்பாங் பகுதியில் நகர்ப்புற வறுமை மேம்பாட்டுத் திட்டத்திற்கு மொத்தம் RM90,000 நிதியை ஒதுக்கியுள்ளது.

“இந்த நிதியை அம்பாங் ஜெயா நகராண்மை கழக நிர்வாகப் பகுதியில் உள்ள வீடுகளைப் புதுப்பிக்க ஒரு குடும்பத்துக்கு RM15,000 வீதம் ஆறு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு எப்போதும் உதவும் மற்றும் ஆதரவளிக்கும் விளையாட்டுக் கழகங்களின் முயற்சிகளைப் பாராட்டுவதற்காக அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கும் RM1,000 நன்கொடை வழங்கியது. அவை “Dragon FC Tasek Tambahan Football Sports Club மற்றும் Ampang Tasek Remote Control Car Club (ATRC) ஆகியவை ஆகும்.


Pengarang :