SELANGOR

நகராண்மைக் கழகத்தின்  மற்றும் (பிபிடி) அனுமதியின்றி மேற்கொண்ட சீரமைக்கும் பணி நிறுத்தப்பட்டது – கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூன் 16: கோலா சிலாங்கூரில் உள்ள ஒரு வணிக வளாகம் உள்ளூர் அதிகாரசபையின் (பிபிடி) அனுமதியின்றி சீரமைக்கும் பணியை மேற்கொண்டதால் அதனை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த நடவடிக்கை சாலைகள், வடிகால் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 இன் கீழ் எடுக்கப்பட்டது என்று கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் கட்டிடக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்தது.

“மறு சீரமைப்புச் செய்ய உத்தேசித்துள்ள வளாகங்கள் அல்லது குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு முதலில் கோலா சிலாங்கூர் நகராண்மை கழகத்திலிருந்து புதுப்பிப்பதற்கான மற்றும் ரோரோ தொட்டிகளைப் வாடகைக்கு எடுப்பதற்கான அனுமதியைப் பெறுமாறு எம்.பி.கே.எஸ் அறிவுறுத்துகிறது.


“எந்தவித சட்ட மீறல்களையும் தவிர்க்க, மறு சீரமைப்பு அனுமதி விண்ணப்பம் முக்கியமானது. மேலும், தகவல்களுக்கு 03-32891439 நீட்டிப்பு 218 என்ற எண்ணில் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் கட்டிடக் கட்டுப்பாட்டுத் துறையைத் தொடர்பு கொள்ளவும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Pengarang :