SELANGOR

சிலாங்கூரில் உள்ள பள்ளி பெ.ஆ.சங்கங்களுக்கு 1,000 வெள்ளி நிதியுதவி- மந்திரி  புசார் அறிவிப்பு

ஷா ஆலம் ஜூன் 19- பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகப் பணிகளுக்குத் தலா 1,000 வெள்ளி உதவித் தொகை மாநிலத்தில் உள்ள அனைத்து 939 பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிதி விரைவில் மாநில கல்வி இலாகா மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த தொகை அதிகமானதாக இல்லாதிருக்கலாம். ஆனால், நாம் அதிக ஒருங்கமைப்புப் பணிகளை மேற்கொள்வற்குரிய அறிமுக ஏற்பாடாவும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மேலும் சிறப்பாகச் செயல்படுவதற்கு வாய்ப்பாகவும் அமையும் என்று அவர் தெரிவித்தார்.

சிறப்பாகச் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் கற்றல், கற்பித்தலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பெரும் துணையாக இருக்க இயலும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெற்ற கித்தா சிலாங்கூர் கல்வி இலக்குத் திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது சவால் மிக்கதாக விளங்கும் கல்வி முயற்சிகளை மேலும் ஆக்ககரமானதாக்குவதற்கு ஏதுவாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வலுவான ஒற்றுமை உருவாகும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.


Pengarang :