SELANGOR

அம்பாங் ஜெயா நகராண்மை கழகச் சந்தை வணிகர்களின் 15 கடைகளுக்கு மாற்று  இடம்

ஷா ஆலம், ஜூன் 20: செப்டம்பர் 1 முதல் கம்போங் டத்தோ முஃப்தி ஷுயிப்பில் உள்ள மொத்தம் 15 கடை மற்றும் சந்தை வணிகர்கள் அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) வழங்கிய மூன்று இடங்களுக்கு மாற்றம் செய்யப் படவுள்ளனர்.

அந்த இடங்கள் மேடன் செலேரா பண்டான் இண்டா, மேடான் செலேரா அங்சனா ஹிலிர் மற்றும் பசார் பாசா தாசிக் தம்பஹான் என ஊராட்சி மன்றம் (பிபிடி) தெரிவித்துள்ளது.

“இந்த இடமாற்றம் தொடர்பாக தொடர்ச்சியான ஆன்-சைட் விவாதங்கள் மற்றும் வணிகர்கள் உடனான ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து கடைகளுக்கும் மற்றும் சந்தைகளுக்கும் மூன்று அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இறுதி அறிவிப்பு மே 2023 இல் வெளியிடப்பட்டது.

“மார்ச் 2023 மற்றும் ஜூன் 2023 என இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, மூன்றாவது ஒத்திவைப்புக்கான வணிகர்களின் மேல்முறையீடு ஜனவரி 1, 2024 வரை பரிசீலிக்க படாது” என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் மேலும் கூறுகையில், 2017 ஆம் ஆண்டு முதல்
வர்த்தகர்களின் இடமாற்றம் தொடங்கியது. இதுவே சுங்கை பெசி-உலு கெலாங்
விரைவுச்சாலை (SUKE) கட்டுமானத் திட்டத்தின் போதும் செயல்படுத்தப்பட்டது,
ஏனெனில் அந்த இடம் சாலை நெரிசலை ஏற்படுத்தியது மற்றும் சாலை
பயன்படுத்துபவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

“கம்போங் டத்தோ முஃப்தி ஷுயிப்பில் உள்ள மொத்தம் 60 காலை சந்தை வணிகர்கள் அக்டோபர் 2022 முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு, கவுன்சில் அந்நிலத்தின் செயல்பாட்டை முன்பு இருந்ததைப் போலவே மீட்டெடுக்கும்.

உள்ளூர்வாசிகளின் பயன்பாட்டிற்காக அவ்விடத்தை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் கவுன்சில் மேற்கொண்டு வருவதாக,குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :