SELANGOR

சட்டவிரோதமாக ஸ்னூக்கர் மற்றும் பொழுதுபோக்கு  சேவையை வழங்கிய உணவகம் மூடப்பட்டது –  கிள்ளான் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூன் 23: நேற்று இங்குள்ள ஜாலான் பெக்கான் பாரு கிள்ளானில் உள்ள உணவகம் ஒன்று சட்டவிரோதமாக ஸ்னூக்கர் மற்றும் பொழுதுபோக்கு சேவையை வழங்கியதால்  கிள்ளான் நகராண்மை கழகத்தால்  மூடப்பட்டது.

உள்ளூர் அதிகார சபை (PBT) விசாரணையின் முடிவில், உணவக உரிமையாளரிடம் வணிக உரிமம் மற்றும் உணவக நடவடிக்கைகளுக்கான விளம்பரம் (2023) மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“ஊராட்சி  மன்ற (PBT) உரிமத் துறையின் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை  ஒரு மாத காலமாக அந்த உணவக உரிமையாளர் நடத்தி வந்துள்ளார்.

சிலாங்கூர் பொழுதுபோக்கு இடங்கள் சட்டம் 1995, 2001 மற்றும் திருத்தங்கள் 1998, 2001 இன் கீழ் ஓய்வறைகள் மற்றும் ஸ்னூக்கர் கைப்பற்றப்பட்டது என கிள்ளான் நகராண்மை கழகம் தெரிவித்தது.

கரோக்கே பெட்டிகள், தொலைக்காட்சிகள், ஸ்பீக்கர்கள், ஸ்னூக்கர் குச்சிகள் மற்றும் ஸ்னூக்கர் பந்துகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன என அதே அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

“ஆபரேட்டர்கள் சட்டம் மற்றும் எங்கள் அறிவுறுத்தல்களுக்கு இணங்குதை உறுதிசெய்ய, கிள்ளான் நகராண்மை கழகம் அவ்வப்போது கண்காணிப்பை மேற்கொள்ளும்,” என்று அவர் தெரிவித்தார். 


Pengarang :