ANTARABANGSA

ஜோ பைடன், மோடி சந்திப்பு- இந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்

வாஷிங்டன், ஜூன் 23- அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு நேற்று
வாஷிங்டன் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளை
மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு நல்கப்பட்டது. அமெரிக்க அதிபர்
ஜோ பைடன்-மோடி இடையிலான சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான
உறவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியப் பிரதமரின் இந்த பயணத்தின் போது சீனாவின் உலகலாவிய
ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக இரு நாடுகளுக்கும் இடையே
தற்காப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒப்பந்தங்கள்
கையெழுத்திடப்படவுள்ளன.

“இரு மகத்தான நாடுகள், இரு மகத்தான் நண்பர்கள், இரு மகத்தான
சக்திகள், சியர்ஸ்“ என்று அதிபர் பைடன் மோடிக்கு வழங்கப்பட்ட
அரசாங்க விருந்தில் கூறினார்.

அதற்கு பதிலளித்த மோடி “நீங்கள் மென்மையானவர், ஆனால் செயல் என
வரும் போது மிகவும் உறுதியானவர்“ என்றார்.

இந்தியாவும் அமெரிக்காவும் முறையான உடன்படிக்கைகளுக்கு உட்பட்ட
நட்பு நாடுகளாக இல்லாவிட்டாலும் இந்தியா சீனாவின் கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த எதிராளியாக எப்போதும் இருக்க வேண்டும் என
அமெரிக்கா விரும்புகிறது.

இவ்விரு தலைவர்களும் தங்களின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில்
பெய்ஜிங்கை நேரடியாக விமர்சிக்காவிட்டாலும் ஜி ஜின் பெங்
அரசாங்கத்தை மறைமுகமாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆதிக்கத்தின் மற்றும் பலாக்காரத்தின் இருண்ட நிழல் இந்தோ-பசிபிக்
பகுதியில் படிகிறது. நமது பங்காளித்துவத்தில் கவலைக்குரிய மையப்
புள்ளியாக இந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மை விளங்குகிறது என்று
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது மோடி
தெரிவித்தார்.


Pengarang :