NATIONAL

மலேசியா-இந்தோனேசியா எல்லை பிரச்சனை தொடர்பாக விஸ்மா புத்ராவிலிருந்து  தகவல் கசிந்துள்ளதா?

புத்ராஜெயா  ஜூன் 23:  மலேசியா-இந்தோனேசியா எல்லை பிரச்சனை தொடர்பான தகவல் விஸ்மா புத்ராவிலிருந்து கசிந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நேற்று ஒரு ஊடகப் பேட்டியில், விஸ்மா புத்ரா இச் சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக கூறினார். இதற்கிடையில், சமீபத்தில் இந்தோனேசியாவுடன்  கையெழுத்திடப்பட்ட கடல் எல்லை ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையில் அரசாங்கம் சமரசம் செய்து வருவதாகக் கூறப்படும் கூற்றுகள் குறித்து கருத்து தெரிவித்த  அவர், இது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில்  விளக்கம் அளித்துள்ளார்  என்றார்.

“எல்லைப் பிரச்சனை புதிய முயற்சி அல்ல, 18 வருடங்களாக இருந்து வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், இணக்கம் காணப்பட்ட விடயங்களைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“இதற்கிடையில், சபாவில் உள்ள புலாவ் செப்டிக் மற்றும் ஜொகூர் பகுதிக்கு வெளியே உள்ள மூன்று கடல் மைல்கள் போன்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லாத விஷயங்கள் கையெழுத்திடப் படவில்லை.

நாங்கள்  இந்தோனேசியாவிடம்  சர்ச்சைக்குட்பட்ட  விவகாரங்களில்  உடன்படவில்லை என்று கூறினோம், அதனால்தான் நாங்கள் கையெழுத்திடவில்லை.

எதிர்க்கட்சிகள் இந்த ஒப்பந்தத்தை சமரசம் (நாட்டின் இறையாண்மை) என்று மொழிபெயர்த்துள்ளனர்.

நாட்டின் எல்லைகள் மற்றும் இறையான்மையை உள்ளடக்கிய உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவதில் வல்லுநர்களின் கருத்துக்களை அரசாங்கம் புறக்கணிப்பது சாத்தியமற்றது என்று சைபுடின் மேலும் கூறினார்.

இந்தோனேசியாவுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதைத் தொடர்ந்து நாட்டின் இறையாண்மை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று அன்வார்  சமீபத்தில் டேவான் ராக்யாட்டில் கூறினார்.

அந்த  ஒப்பந்தங்கள் இரு தரப்பினராலும் ஒப்பு கொள்ளப்பட்ட கடல் எல்லைகளை மட்டுமே உள்ளடக்கியிருந்தது, சபாவில் உள்ள புலாவ் செப்டிக் போன்ற சர்ச்சைக்கு உட்பட்டவை அல்ல என்பதால், “சமரசம்” என்ற கேள்வி எழவில்லை என்று அவர் உறுதியளித்தார்.


Pengarang :