SELANGOR

மெகா கேரியர் கார்னிவல் திட்டம் மக்களுக்கு அவசியம்

ஷா ஆலம், ஜூன் 27: தற்போது மக்களிடையே நிலவி வரும் பிரச்சனைகளில் வேலை இல்லாத் திண்டாட்டம் ஒன்றாகும். இதற்குத் தீர்வு காணும் வகையில் சிலாங்கூர் மாநில அரசால் மெகா கேரியர் கார்னிவல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மெகா கேரியர் கார்னிவல் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாகும் என தாமான் செந்தோசாவில் வசிக்கும் திரு வசந்த ராஜ் (30) கருத்து தெரிவித்தார். வங்கி அதிகாரியாகப் பணிப்புரியும் திரு வசந்த ராஜ் இது போன்ற திட்டங்கள் நம் மக்களுக்குக் குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும் என்றார்.

இதன்வழி நம் நாட்டில் வேலையின்மை பிரச்சனையைக் குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், மாநில அரசால் ஏற்பாடு செய்யப்படும் இதுபோன்ற பயனுள்ள திட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் மக்கள் நிச்சயம் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

தொடர்ந்து, மெகா கேரியர் கார்னிவல் திட்டம் சிலாங்கூர் அரசாங்கத்தின் ஒரு சிறந்த முன்முயற்சியாகும் என நெகிரி செம்பிலானைச் சேர்ந்த மலாயாப் பல்கலைக்கழக மாணவர் ஷர்வின் (20) கூறினார். 17 மற்றும் 18 ஜூன் 2023 ஆம் நாட்களில் ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு சந்தையில் தாமும் கலந்து கொண்டதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்திருந்தது, காரணம் அதிக அளவில் மக்கள் கூட்டம் அங்கு அலை மோதியது குறிப்பாக இளைஞர்கள் ஆவர் என்றார். இந்நிகழ்வின் மூலம் தாமும் வேலை வாய்புகள் பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்ததாகவும், இவையாவும் எதிர்காலத்தில் தமக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.

 


Pengarang :