SELANGOR

மோரிப் கடற்கரை மீண்டும் செயல்படத் தொடங்கியது

ஷா ஆலம், ஜூலை 5: புயல் காரணமாக கடந்த மாதத்திலிருந்து மூடப்பட்ட மோரிப் கடற்கரை, மீண்டும்  ஓய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக கோலா லங்காட் நகராண்மை கழகம் (எம்பிகேஎல்) தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு வாரக் காலப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் துப்புரவு நிலையை மதிப்பீடு செய்த பின் அந்த பகுதியை மீண்டும் திறக்க உயர் நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது என அதன் கார்ப்பரேட் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை தெரிவித்தது.

ஸ்ரீ பந்தாய் பங்களாவைச் சுற்றி உள்ள துப்புரவு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 14 ஆம் தேதி ஏற்பட்ட சம்பவத்தால் விழுந்த 65 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

“விழுந்த [சில மரக் கட்டைகளை முழுவதுமாக சுத்தம் செய்ய முடியவில்லை, ஏனெனில் அவை வடிகால் மற்றும் நடைபாதைகள் போன்ற பிற கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடும்.

“இருப்பினும், இது வருகையாளர்களுக்கு எந்த இடையூறுகளையும் ஏற்படுத்தாது. முதற்கட்டமாக 22 மரங்களை நடவு செய்யும் பணி படிப்படியாக நடைபெறும்” என்று நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

“வியாபாரிகள் வழக்கம் போல் மீண்டும் செயல் படலாம் மற்றும் கியோஸ்க் விற்பனையாளர்கள் 10×10 அளவிலான தற்காலிகக் கூடாரங்களைப் பயன்படுத்தலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டது.


எம்.பி.கே.எல்., பழுதுபார்க்கும் பணியின் காரணமாக கடலோரப் பாதையில் உள்ள மின்சாரம் மற்றும் லைட்டிங் வயரிங் இன்னும் செயல்படவில்லை.


Pengarang :