NATIONAL

தேர்தலில் மூன்று ஆட்சிக்குழு உறுப்பினர்கள் போட்டியிடவில்லை

ஷா ஆலம், ஜூலை 6 – எதிர்வரவிருக்கும்
மாநிலத் தேர்தலில்
போட்டியிடுவதில்லை என்ற மூன்று
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின்
முடிவைத் தாம் மதிப்பதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை
மற்றும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்
துறைகளுக்கான மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் (
பண்டார் பாரு கிளாங்), பொது சுகாதாரத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி
மரியா மாமுட் (ஸ்ரீ செர்டாங்), சமூக-பொருளாதார மேம்பாடு, சமூக
நலன் மற்றும் தொழிலாளர்கள்
திறனளிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர்
வி.கணபதிராவ் (கோத்தா கெமுனிங்)
ஆகியோரே அந்த மூன்று உறுப்பினர்கள்
ஆவர்.

என்னைப் பொறுத்தவரை, அம்மூவரின்
முடிவு சிலாங்கூருக்கு ஒரு இழப்பாகும்.
குறிப்பாக மாநிலத்தின் வளர்ச்சிக்கு
அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை
வழங்கியுள்ளனர்.

எனினும், புது முகங்களுக்கு வாய்ப்பளிப்பதற்கும் அவர்களின் புதிய
கருத்துகள் மற்றும் பங்களிப்பை மாநில
அரசின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவதற்கும் இந்த முடிவு வழி
வகுக்கும் என நம்புகிறேன் என்று அவர்
குறிப்பிட்டார்.

தெங், டாக்டர் சித்தி மரியா மற்றும்
கணபதிராவ் ஆகிய மூன்று சிலாங்கூர்
முன்னாள் உறுப்பினர்கள் மாநிலத்
தேர்தலில் தங்கள் தொகுதிகளைத்
தற்காக்கப்போவதில்லை என்பதை
உறுதிப்படுத்தியதாக ஊடகங்கள் முன்பு
செய்தி வெளியிட்டன.

கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு,
சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில்
ஆகஸ்ட் 12ஆம் தேதி தேர்தலும் ஜூலை 29ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும்
நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Pengarang :