SELANGOR

50,000 ரிங்கிட் செலவில் சீரமைக்கப்பட்ட சாலை –  300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயன்

ஷா ஆலம், ஜூலை 7: ஜாலான் ராயா கம்போங் இடமான், பெஸ்டாரி ஜெயாவில் சுமார் 50,000 ரிங்கிட் செலவில் சீரமைக்கப்பட்டுள்ள சாலை, கிராமத்தில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனளித்துள்ளது.

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் உள்ள ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அச்சாலையைப் புதுப்பிக்கும் பணிகள் மே 22 தொடங்கி ஜூன் 12 அன்று நிறைவடைந்தன என முன்னால் பெர்மாதாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (ADN) ரோசானா சைனல் அபிடின் கூறினார்.

கோலா சிலாங்கூர் மாவட்ட அலுவலகத்தின் கீழ் உள்ள ஒப்பந்ததாரர் ஒருவரால் இந்த மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்பட்டது,” என்று நேற்று அவரைத் தொடர்பு கொண்ட போது கூறினார்.

நேற்று ரோசானா, அக்கிராமத்திற்குச் சென்று சீரமைக்கப்பட்ட சாலையைப் பார்வையிட்டு வந்ததாகத் தெரிவித்தார்.

பழுதடைந்த மற்றும் சீரமைக்கப்பட வேண்டிய கிராமச் சாலைகளை ஆய்வு செய்வதற்காக வழக்கமாக களத்திற்குச் செல்லும் பெர்மாதாங் தொகுதியின் (DUN) சேவை மையக் குழுவினரின் கணக்கெடுப்பின் விளைவாக இந்த மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.

2023 பட்ஜெட்டில் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்திற்கு RM28 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

இது மக்களின் நலனுக்காகச் சிறிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மற்றும் மேம்படுத்த உதவும்.


Pengarang :