SELANGOR

மலாய்க்காரர்களுக்கு ஹராப்பான், பாரிசான் எப்போதும் முன்னுரிமை அளிக்கும்- இனத் தீவிரவாதத்தை நிராகரிக்கும்

கோம்பாக், ஜூலை 10- பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தீவிரவாதப்
போராட்டம் நாட்டின் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி மக்கள்
மத்தியில் காணப்படும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து
மீள்வதற்கு அரசு போராடி வரும் இத்தருணத்தில் அந்த கட்சி கொண்டு
வரும் இந்த இனவாத உணர்வுகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

பல இன மற்றும் சமயங்களைக் கொண்ட நாடு என்ற முறையில்
அரசாங்கம் சபா, சரவா உள்ளிட்ட அனைத்து மக்களிடமும் நியாயமான
முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

தீவிரவாதத்தை நோக்கி நாடு நிர்வாகம் செய்யப்படுவதை நாம் அனுமதிக்க
முடியாது. தேசிய முன்னணி கொள்கையிலும் இது காணப்படுகிறது.
கெஅடிலான் ராக்யாட் கட்சியின் செயல்பாடும் ஏறக்குறைய
இதுவாகத்தான் இருக்கிறது என்றார் அவர்.

நமது எதிரிகளின் மூலதனம், அரசியல் செயல்பாடுகள் அனைத்தும்
தீவிரவாதப் போக்குடையவையாகத்தான் உள்ளன. நாம்
மலாய்க்காரர்களின் நலன் காத்து இஸ்லாத்தின் மேன்மையை
கட்டிக்காக்கிறோம். அதே சமயம், மற்றவர்களையும் நாம் கவனத்தாக
வேண்டும். காரணம் இஸ்லாம் நீதியை தற்காக்கிறது என்று அவர்
குறிப்பிட்டார்.

மலாய் சமூகம், மரபுகளையும் நன்னடைத்தைகளையும் பாதுகாக்கிறது.
ஆணவமும் தன்மூப்பான போக்கும் அதனிடம் கிடையாது என்பதோடு
மற்றவர்களைக் கொடுமைப்படுத்துவதும் கிடையாது. தீவிரப்போக்கு                              தொடர நாம் அனுமதித்தால் பிளவுகள் தொடர்ந்து பிரச்சனைகளைத் தீர்க்க
முடியாத நிலை ஏற்படும் என அவர் சொன்னார்.

நேற்று இங்கு சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி நிலையில் தேர்தல்
இயந்திரத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத்
தெரிவித்தார்.


Pengarang :