SELANGOR

ஐந்தாண்டுகளில் அதிக கட்டுப்படி விலை வீடுகளைக் கட்டிய மாநிலம் சிலாங்கூர்

கோல சிலாங்கூர், ஜூலை 13- சிலாங்கூரில் கடந்த ஐந்தாண்டுகளில்
40,000கும் மேற்பட்ட கட்டுபடி விலை வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இதுவே அதிகமான
எண்ணிக்கையாகும்.

கூட்டரசு அரசின் உதவியின்றி சொந்த வழிமுறையைப் பயன்படுத்தி
வீடுகளை நிர்மாணிக்கும் மாநில அரசின் ஆற்றலை தாம் போற்றுவதாக
கெடிலான் கட்சியின் வியூக இயக்குநர் அக்மால் நசாருல்லா முகமது
நாசீர் கூறினார்.

சிலாங்கூர் கூ எனப்படும் கட்டுபடி விலை வீடுகளை அதிகமாக கட்டிய
மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. மாநில மக்கள் சொந்த வீடு
பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் தனது சொந்த உருவாக்கம்
வாயிலாக இந்த திட்டத்தை நிறைவேற்றி வருகிறது என்று அவர்
சொன்னார்.

கட்டுபடி விலை வீடுகளை நிர்மாணிப்பதில் மத்திய அரசின் வழிமுறை
எதனையும் பயன்படுத்தாமல் தனது சொந்த வழிமுறையை அம்மாநிலம்
கடைபிடிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற பெர்மத்தாங் தொகுதி நிலையிலான மடாணி
ஜெலாஜா பயணத் தொடர் நிகழ்வில் உரையாற்றிய போது அவர்
இதனைத் தெரிவித்தார்.

பிரச்சனைக்குரிய கட்டுபடி விலை வீடமைப்புத் திட்டங்களுக்கு
புத்துயிரூட்டும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக ஊராட்சி
மன்ற மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான அக்மால் கூறினார்.

கடந்த ஏழு மாதங்களில் 22 சத்து மலேசியா மக்கள் வீடமைப்புத்
திட்டங்களில் (பிரிமா) ஒன்பது திட்டங்கள் வெற்றிகரமாக
முடிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :