NATIONAL

கெடா மந்திரி புசார் விவகாரம் இன்னும் முடியவில்லை – சிலாங்கூர் சுல்தான் கூறுகிறார்

ஷா ஆலம், ஜூலை 17- சிலாங்கூர் அரச அமைப்பை அவமதிக்கும் வகையில் கெடா
மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் பேசிய விவகாரம்  இன்னும்
முடிவடையவில்லை என்று மேன்மை  தங்கிய சிலாங்கூர் சுலதான் கூறியுள்ளார்.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்  டத்தோ ஹுசேன் ஓமார் கானை சந்தித்தப்
பின்னர்; இந்த விவகாரம் இன்னும்  தீர்க்கப்படவில்லை; என்று மேன்மை  தங்கிய சுல்தான் தெரிவித்துள்ளார்  என்று சிலாங்கூர் அரச அலுவலகம் இன்று தனது சமூக ஊடகம் வாயிலாக  கூறியுள்ளது.

சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்  அவர்கள் சிலாங்கூர் பாஸ் ஆணையர்
டத்தோ  டாக்டர் அகமது யூனுஸ்   ஹைரியையும் இஸ்தானா புக்கிட் காயாங்கனில் இன்று சந்தித்தார்.

சிலாங்கூர் அரச அமைப்பை அவமதிக்கும்   வகையில் அமைந்ததாகக் கூறப்படும்
அரசியல்   பிரசாரக் கூட்டம் ஒன்றில் கெடா   மந்திரி புசார் சனுசி ஆற்றிய உரை தொடர்பில்    யூனுஸ் ஹைரி மற்றும் டத்தோ  ஹூசேன் ஓமார் கானுடன் சுல்தான்
தனித்தனியே சந்திப்பு நடத்தியதாக அரசஅலுவலகம் தனது முகநூல் பக்கம்
வாயிலாக வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளது.

சிலாங்கூர் சுல்தானிடம் சனுசி மன்னிப்புக்  கோரியதாகக் கூறப்பட்ட போதிலும்  அவருக்கு எதிராகச் செய்யப்பட்ட 50க்கும்  மேற்பட்ட புகார்கள் மீதான விசாரணை
நிறுத்தப்படவில்லை என தேசியப் போலீஸ்  படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன்
ஹுசைன் நேற்று கூறியிருந்தார்.


Pengarang :