NATIONAL

திவேட் கல்வி திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள்- அமைச்சர் சிவகுமார் தகவல்

கோலாலம்பூர் ஜூலை 20- இந்திய சமுதாயத்தின் ஏழ்மை நிலை தாக்கத்தை குறைக்க
திவேட் (TVET) எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி திட்டத்தில் இந்திய
மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அறிவித்திருப்பதை பெரிதும் வரவேற்பதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

நாட்டில் 12 அமைச்சுகளின் கீழ் திவேட் தொழில் திறன் கல்வி வழங்கப்படுகிறது. இந்த தொழில் திறன் கல்வியை இரண்டாம் தர கல்வியாக கருதாமல் இந்திய மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்க முன் வர வேண்டும்.

வெளிநாடுகளில் தொழில் திறன் கல்வியை அதிகமானோர் பயின்று சிறந்த எதிர் காலத்தை அமைத்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் திவேட் தொழில் திறன் கல்வியைப் பயில முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :