SELANGOR

கைவிடப்பட்ட வாகனங்களை நிறுத்தும் மையம் – அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூலை 28: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம், (எம்பிஏஜே) கைவிடப்பட்ட வாகனங்களுக்கு ஒரு நிறுத்த மையத்தை நிறுவி, தனியாருக்குச் சொந்தமான பயன்படுத்தாத வாகனங்களை  உரிமையாளர்கள்  சுயமாக ஒப்படைக்க பொதுமக்களை ஊக்குவிக்கிறது.

இந்த திட்டம் மறைமுகமாக கைவிடப்பட்ட வாகனங்களைப் பொது இடங்களில் நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைப்பதை கட்டுப்படுத்த உதவும் என்று எம்பிஏஜே தலைவர் டாக்டர் அனி அஹ்மட் கூறினார்.

“மலேசியாவில் இந்த வகையான முயற்சியை செயல்படுத்தும் முதல் ஊராச்சிமன்றம் (PBT) எம்பிஏஜே ஆகும்.

“இந்த திட்டம் அம்பாங் ஜெயா பகுதியில் ஒரு சிறந்த சூழலை உருவாக்க உதவும்,” என்று அவரை எம்பிஏஜே கூட்டத்திற்குப் பிறகு சந்தித்தபோது கூறினார்.

முன்பு அகற்றும் செயல்முறை ஆறு முதல் 12 மாதங்கள் வரை எடுக்க வேண்டியிருந்தது, ஆனால் தற்போது வாகனம் நிறுத்த மையம் இருப்பதால், இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரையிலான செயல்முறையை விரைவுபடுத்துகிறது.


Pengarang :