NATIONAL

ஹாங்காங் தலைவருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

கோலாலம்பூர், ஜூலை 28 – இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிராந்தியத்தின் தலைமை நிர்வாகி ஜோன் லீயை நேற்று சந்தித்ததாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

வர்த்தகம், முதலீடு, நிதி, டிரான்சிட் அமைப்புகள், கல்வி மற்றும் சுற்றுலா
ஒத்துழைப்பு உள்ளிட்ட தொடர்புடைய விஷயங்கள் குறித்து
லீயுடன் தாம் விவாதித்ததாக அன்வார் கூறினார்.

மலேசியா ஹாங்காங்கின் ஒன்பதாவது மற்றும் ஆசியான் நாடுகளில் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக இருப்பதைக் குறிப்பிட்ட லீ, இருதரப்பு வர்த்தகம் ஆண்டு ஆண்டுக்கு அடிப்படையில் 7 சதவீதம் அல்லது 28.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக
(12,770 கோடி வெள்ளி) கடந்தாண்டில் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வர்த்தகம், முதலீடு, புத்தாக்கம், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் மலேசியாவுடனான ஒத்துழைப்பையும் பரிமாற்றத்தையும் ஹாங்காங் மேலும் வலுப்படுத்தும் என்றார் அவர்.

ஹாங்காங் மற்றும் ஹாங்காங் வர்த்தக மேம்பாட்டு மன்றம் இணைந்து ஏற்பாடு செய்த வணிக மதிய உணவில் லீ கலந்து கொண்டார்.

ஹாங்காங் மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு லீ
பயணம் மேற்கொண்டுள்ளார்.

– பெர்னாமா


Pengarang :