NATIONAL

சுங்கை துவாவில் மும்முனைப் போட்டி

செய்தி ; சு.சுப்பையா
கோம்பாக்.ஜூலை.29- சிலாங்கூரில் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சுங்கை துவா சட்டமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிகழ்கிறது. இத்தொகுதியின் நம்பிக்கை கூட்டணியிடம் முன்னனி தலைவர்களில் ஒருவரும் நடப்பு சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளாராகப் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து பெரிக்காத்தான் கூட்டணியின் சார்பில் அரசியலுக்குப் புது முகமான முகமது ஹனிப் பெர்சத்து கட்சி சார்பில் போட்டியிடுகிறார். சுயேட்சை வேட்பாளாராகச் சுமன் கோபால் போட்டியிடுகிறார்.
மேலும், மந்திரி புசார் நம்பிக்கை கூட்டணி சின்னத்தில் போட்டியிடுகிறார். முகமது ஹனிப் பெரிக்காத்தான் சின்னத்திலும் , சுயேட்சை வேட்பாளாரான சுமன் கோபால் சாவி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
இங்கு மும்முனை போட்டி நிலவினாலும். மந்திரி புசாருக்கும் பெரிக்காத்தான் வேட்பாளருக்குமிடையே தான் பலத்த போட்டி நிலவுகிறது.
எது எப்படி இருப்பினும் மந்திரி புசாரின் மகத்தான வெற்றி, வேட்பு மனு தாக்கல் நாளிலேயே தெரிகிறது. பெரிக்காத்தான் தொண்டர்களை விட பல மடங்கு அதிகம் நம்பிக்கை கூட்டணியின் தொண்டர்கள்.
மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள், சபா, சரவாக் மாநிலத்தை சேர்ந்த முன்னணித் தலைவர்களும் தொண்டர்களும் திரளாக கலந்துக் கொண்டு தங்களது வற்றாத பேராதவை தெரிவித்துள்ளனர்.
கோம்பாக் தொகுதியில் உள்ள சின்சின் ஆற்று பாலத்தில் நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி, சரவாக்கை சேர்ந்த ஜி.பி.எஸ்,சபாவை சேர்ந்த ஜி.ஆர்.எஸ், பார்டி பங்சா மலேசியா ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் விடியற்காலை 7 மணிக்கெல்லாம் திரள தொடங்கி விட்டனர்.
சபா மாநிலத்தை சேர்ந்த மூசா அமான், புங் மொக்தார், துணை அமைச்சர் சரசுவதி போன்ற பெரும் புள்ளிகள் திரண்டு இருந்தனர். காலை 8.40 மணிக்கு அணி வகுப்பு தொடங்கியது. கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 3 வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் அணி வகுப்பை தொடங்கினர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் அணி வகுப்பு இடையில் கலந்துக் கொண்டு தொண்டர்களுக்கு மாபெரும் உட்சாகத்தை ஊட்டினார்.
சுங்கை துவா சட்டமன்ற வேட்பாளர் தினம் மிகவும் கோலா களத்துடனும் பரபரப்புடனும்  நடை பெற்று முடிந்தது.
அஞ்சல் வாக்குகள் 8 ஆம் தேதியும் பொது வாக்களிப்பு ஆகஸ்ட் 12 ஆம் தேதியும் நடை பெறும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

Pengarang :