SELANGOR

புக்கிட் மெலாவத்தி, பாயா ஜெராஸ் தொகுதிகளில் வெற்றி நமதே – தீபன், முகமது கைருடின் நம்பிக்கை

சுங்கை பூலோ, ஜூலை 29- எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி
நடைபெறும் தேர்தலில் பாயா ஜெராஸ் தொகுதியைத் தக்க வைத்துக்
கொள்ள முடியும் என்று அதன் வேட்பாளர் முகமது கைருடின் ஓத்மான்
நம்பிக்கை கொண்டுள்ளார்.

பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியில் சிலாங்கூர் அடைந்துள்ள வளர்ச்சியின்
அடிப்படையில் இந்த நம்பிக்கையை தாம் வெளிப்படுத்துவதாக
அத்தொகுதியின் நடப்பு உறுப்பினரான அவர் தெரிவித்தார்.

கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாநில
மக்களுக்கு பல்வேறு திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ளதாக
அவர் சொன்னார்.

தேர்தலுக்கான தயார் நிலையைப் பொறுத்த வரை ஒரு மாதத்திற்கு
முன்பாகவே நாங்கள் மக்களை அணுகும் பணியில் ஈடுபட ஆரம்பித்து
விட்டோம். இந்த தேர்தலில் பாயா ஜெராஸ் உள்ளிட்ட இடங்களில்
வென்று மாநில அரசை பக்கத்தான் தொடர்ந்து வழி நடத்தும் என்று அவர்
தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து மேம்பாடு காண்பதற்கு ஏதுவாக
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள் முழு ஆதரவை வழங்க
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, புக்கிட் மெலாவத்தி தொகுதியில் தாம் வெற்றி பெற்றால்
வறுமையை ஒழிப்பது, குடியிருப்பாளர்களின் வருமானத்தைப் பெருக்குவது
மற்றும் இப்பகுதியைப் பிரசித்தி பெற்ற சுற்றுலா மையமாகத் தரம்
உயர்த்துவது ஆகிய திட்டங்களை அமல்படுத்தவுள்ளதாகப் பக்கத்தான்
ஹராப்பான் வேட்பாளர் தீபன் சுப்பிரமணியம் கூறினார்.

எனது தலைமையின் நோக்கம் வறுமையை ஒழிப்பதாகும்.
இவ்வாண்டிற்குள் ஏழ்மை நிலையை ஒழிக்க நான் விரும்புகிறேன்
என்றார் அவர்.

கோல சிலாங்கூரில் அதிக பாரம்பரிய கிராமங்கள் உள்ளன. அங்குள்ள
வீடுகளை ஹோம் ஸ்தேய் எனப்படும் தங்கும் விடுதிகளாக மாற்றுவதன்
மூலம் வருமானத்தை உயர்த்துவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த
முடியும் என அவர் தெரிவித்தார்.


Pengarang :