NATIONAL

 ஊழல் குற்றச்சாட்டுக்காகத் தலைமை ஆசிரியருக்கு ஒரு நாள் சிறை மற்றும் RM10,000 அபராதம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 10 – பெட்டாலிங் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டங்களில் (2019) உள்ள மத ஆரம்பப் பள்ளிகளின் (எஸ்ஆர்ஏ) கட்டிட பராமரிப்பு, மேம்படுத்தும் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட முன்னாள் தலைமை ஆசிரியருக்குச் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நாள் சிறை மற்றும் RM10,000 அபராதம் விதித்தது.

மேலும், நீதிபதி டத்தோ அனிதா ஹருன், 51 வயதான கமாலுடின் சஹ்லான், அபராதத்தை செலுத்த தவறினால், ஐந்து மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.

பெட்டாலிங் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டங்களில் உள்ள மத ஆரம்பப் பள்ளிகளின்கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான பணி கிடைக்க உதவியதற்காக திட்ட மதிப்பில் 11 சதவீதத்தை லஞ்சம் கேட்டதாகக் கமாலுடின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரும் அந்த நோக்கத்திற்காகக் குறிப்பிட்ட நபரிடமிருந்து தனது வங்கிக் கணக்கில் RM164,800 லஞ்சம் பெற்றதையும் ஒப்புக்கொண்டார்.

– பெர்னாமா


Pengarang :