NATIONAL

உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் கூடுதல் பங்களிப்பை ஐந்தாண்டு திட்டம் உறுதி செய்யும்

ஷா ஆலம், ஆக 12- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலத்தின்
பங்களிப்பை அதிகரிப்பதில் சிலாங்கூர் ஒற்றுமை அரசின் தேர்தல்
கொள்கையறிக்கையில் இடம் பெற்றுள்ள பொருளாதார அடிப்படைக்
கூறுகள் முக்கிய அம்சமாக விளங்கும்.

அந்த தேர்தல் கொள்கையறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய
கூறுகளில் மாநிலத்தின் வட மற்றும் தென் பகுதிகளில் இரயில்
சேவையை ஏற்படுத்துவதும் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த முன்னெடுப்பின் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக
பங்களிப்பை வழங்கும் மாநிலமாகச் சிலாங்கூர் தொடர்ந்து விளங்க
முடியும் என்பதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நமது பங்கும்
தொடர்ந்து நிலைத்திருக்கும் அல்லது உயர்வு காணும் என அவர்
தெரிவித்தார்.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டுவாக்கில் இந்த இரயில் தட நிர்மாணிப்பு பணி
முற்றுப் பெற்றப் பின்னர் ஏறக்குறைய மாநிலத்தின் அனைத்துப்
பகுதிகளும் முழுமையான இணைப்பைக் கொண்டிருக்கும். இதன் மூலம்
மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என அமிருடின் நேற்று
தனது டிக் டாக் பதிவில் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் வளர்ச்சியை தொடர்ந்து உறுதி செய்யக்கூடிய திட்டங்கள்
அடங்கிய ஐந்து அம்ச தேர்தல் அறிக்கையை சிலாங்கூர் பக்கத்தான்
ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அமிருடின் கடந்த ஜூலை 31ஆம்
தேதி வெளியிட்டார்.


Pengarang :