NATIONAL

வேட்பாளர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் காலையிலே வாக்களிப்பு மையங்களில் திரண்டனர்

கோலாலம்பூர், ஆக 12- இன்று நடைபெறும் மாநிலத் தேர்தலில்
வாக்களிப்பதற்காக வேட்பாளர் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர்
இன்று காலையிலேயே வாக்களிப்பு மையங்களில் திரண்டனர்.

முக்கிய பிரமுகர்கள் சிலர் காலை 7.30 மணிக்கு வாக்குச் சாவடிக்கு வந்து
மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்கத் காத்திருப்பதைக் காண
முடிந்தது.

காலையிலே வாக்களிப்பு மையத்திற்கு வந்தவர்களில முதலீடு, வர்த்தம்
மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல்
அஜிசும் ஒருவராவார். ஜெராம் தொகுதியில் வாக்களிப்பதற்காகப் புஞ்சா
ஆலம், தேசியப் பள்ளிக்கு வந்த அவர் காலை 8.02 மணிக்கு தனது
ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

பாடாங் கோத்தா தொகுதியில் போட்டியிடும பினாங்கு முதலமைச்சர் சாவ்
கூன் இயோ காலை 7.55 மணிக்கு ஜோர்ஜ் டவுன் ஹூ யூ சியா தேசிய
மாதிரி பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து தனது வாக்கைச்
செலுத்தியப் பின்னர் காலை 8.15 மணியளவில் அங்கிருந்து
வெளியேறினார்.

இதனிடையே திரங்கானு மாநிலத்தின் ரூ ரெண்டாங் தொகுதி
வாக்காளரான பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்
மாராங், ருசிலா தேசிய பள்ளியில் உள்ள வாக்களிப்பு மையத்தில்
வாக்களித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரந்தாவ் தொகுதி பாரிசான் நேஷனல்
வேட்பாளரான அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஹசான்
தனது துணைவியார் டத்தின்ஸ்ரீ ராஜா சல்பியா தெங்கு நஜ்முடினுடன்
ரந்தாவ் சுங் ஹூவா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு காலை 8.30
மணிக்கு வந்தார்.

சிக்காமாட் தொகுதியில் போட்டியிடும் நெகிரி செம்பிலான் மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் சிக்காமாட், ஹாஜி முகமது ரெட்ஸா
பள்ளியில் காலை 8.30 மணிக்கு வாக்களித்தார்.

சுங்கை துவா தொகுதி வேட்பாளரான சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி பத்து கேவ்ஸ், செலாயாங் பாரு, சீனப் பள்ளியில் உள்ள
வாக்குச் சாவடிக்கு காலை 8.35 மணிக்கு வந்தார். சுமார் 10
நிமிடங்களுக்குப் பிறகு அவர் தனது ஜனநாயக க் கடமையை
நிறைவேற்றி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.


Pengarang :