SELANGOR

மக்கள் பெரிக்காத்தானுக்கு வாக்களித்தால் சிலாங்கூர் பின்னோக்கிச் செல்லும்- பெர்மாத்தாங் வேட்பாளர் கூறுகிறார்

தஞ்சோங் காராங், ஆக 12- பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு
வாக்களிப்பதன் மூலம் வளர்ச்சியடைந்த மாநிலமான சிலாங்கூரை
பின்னோக்கிச் செல்ல வைத்து விடாதீர்கள் என்று மாநில மக்களை
பெர்மாத்தாங் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் கேட்டுக் கொண்டார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் தலைமைத்துவம்
சிலாங்கூரை உயர் அந்தஸ்து கொண்ட மாநிலமாக உருவாக்கியுள்ளதாகப்
பக்யா என அழைக்கப்படும் முகமது யாஹ்யா மாட் ஷாரி கூறினார்.

பொருளாதாரத்தில், சமூகவியலில், அடிப்படை வசதிகளில், விளையாட்டில்
மற்றும் இதரத் துறைகளில் மாநிலம் உயரிய அந்தஸ்துடன் திகழ்ந்து
வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர மாநில மக்களுக்காகப் பல்வேறு திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்தகையத் திட்டங்கள் இதர மாநிலங்களில்
கிடையாது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள கம்போங் சுங்கை தெராப்பில் நேற்றிரவு நடைபெற்ற
பெர்மாத்தாங் தொகுதியின் இறுதி தேர்தல் பிரசார நிகழ்வில்
உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிளந்தான், திரங்கானு, கெடா ஆகிய மாநிலங்கள் மக்களுக்குக் கூடிய பட்ச
அனுகூலங்களை வழங்காததால் அம்மாநிலங்களை முன் உதாரணமாகக்
கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.


Pengarang :