SELANGOR

மாநிலத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து சிலாங்கூரில் நாளை பொது விடுமுறையாக அறிவிப்பு

ஷா ஆலம், ஆக 13 – பக்காத்தான்
ஹராப்பான்-பாரிசான் நேஷனல்
கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன்
மாநிலத்தைத் தக்க வைத்துக்
கொண்டதைத் தொடர்ந்து மாநில அரசு
நாளை பொது விடுமுறையாக
அறிவித்துள்ளது.

நேற்றைய மாநிலத் தேர்தலையொட்டி
இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது
என்று சிலாங்கூர் அரசு செயலாளர் டத்தோ
ஹாரிஸ் காசிம் கூறினார்.

நேற்று நடைபெற்ற 15வது சிலாங்கூர்
தேர்தலுக்காக ஆகஸ்டு 14 ஆம் தேதி
திங்கட்கிழமை மாநிலம் தழுவிய பொது
விடுமுறை தினமாக அறிவிக்க சிலாங்கூர்
அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகக்
கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
என்று அவர் இன்று ஒரு அறிக்கையில்
தெரிவித்தார்.

சிலாங்கூரை ஒற்றுமை அரசாங்கம் தக்க
வைத்துக் கொண்டால் ஆகஸ்டு 14 ஆம்
தேதி பொது விடுமுறை தினமாக
அறிவிக்கப்படும் என்று கடந்த
வெள்ளியன்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
அறிவித்திருந்தார்.

சிலாங்கூரில் உள்ள 56 தொகுதிகளில் 34
தொகுதிகளை ஒற்றுமைக் கூட்டணி
வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல்
ஆணையம் நேற்று இரவு அறிவித்தது.
இதன்வழி ஹராப்பான்-பாரிசான்
கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன்
ஆட்சி அமைக்கிறது.


Pengarang :