NATIONAL

அபராதத்தைத் தவிர்க்க ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவீர்- எம்.பி.பி.ஜே. அறிவுறுத்து

ஷா ஆலம், ஆக 15- அபராதம் செலுத்துவதைத் தவிர்க்க எதிர்வரும் ஆகஸ்டு
மாதம் 15ஆம் தேதிக்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்தி விடும்படி
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்கள்
நினைவூட்டப்படுகிறார்கள்.

கடந்த ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 17 கோடியை
69 லட்சத்து 66 ஆயிரம் வெள்ளி நடப்பு வரியாக உள்ள வேளையில் 27 கோடியே 73 லட்சத்து 75 ஆயிரம் வெள்ளி வரி நிலுவையில் உள்ளதாக மாநகர் மன்றத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவு கூறியது.

பொது மக்கள் https://ecukai.mbpj.gov.my/mbpjesalinanbil  எனும் அகப்பக்கம்
வாயிலாக வரி பாக்கியைச் சரிபார்க்கலாம். மற்றும் ePay@MBPJ அல்லது
eCukai@MBPJ செயலி மூலம் வரி செலுத்தலாம் என அது கூறியது.

சொத்து உரிமையாளர்கள் இணையம் வாயிலாக வரியைச் செலுத்த
ஊக்குவிக்கப்படுகிறார்கள். மதிப்பீட்டு வரி தொடர்பில் ஏதேனும் கேள்விகளை
அல்லது புகார்கள் இருந்தால் அவற்றை @mbpj.gov.my என்ற இணைப்புக்கு
அனுப்பலாம் என்றும் அதில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, www.mbpj.gov.my அல்லது Facebook, Twitter மற்றும் Instagram
போன்ற மாநகர் மன்ற சமூக ஊடகங்களைப் பார்வையிடலாம் அல்லது 03 7956
3544 வரி 102/103/108/109 என்ற எண்களில் மாநகர் மன்றத்தின் கருவூலத்
துறையைத் தொடர்பு கொள்ளவும்.


Pengarang :