ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

வைப்பு தொகையை தற்காக்க செல்வாக்கு  இல்லாத பெரிக்காத்தான்.

செய்தி சு. சுப்பையா
சுங்கை பூலோ.ஆகஸ்ட்.14-   6 மாநிலத்தில் 245 சட்ட மன்றத்தில் மூன்று கூட்டணியும் ஒரு சில கட்சிகளும் நடந்து முடித்த தேர்தலில் போட்டியிட்டன.  மூன்று மிகப் பெரிய கூட்டணிகள் நம்பிக்கை கூட்டணி, பெரிக்காதான், தேசிய முன்னணி ஆகியவைகள் ஆகும்.
 இதில் போட்டியிட்ட நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் ஒரு தொகுதியில் கூட வைப்பு தொகையை இழக்காமல் அதன் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க காட்டியுள்ளது. நம்பிக்கை கூட்டணியில் மக்கள் நீதிக் கட்சி,  ஜ.செ.க, அமானா ஆகிய 3 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதே போல் தேசிய முன்னணியில் அம்னோ, ம.சீ.ச., ம.இ.கா ஆகிய 3 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தேர்தலில் அம்னோ மட்டுமே போட்டியிட்டது. இந்த இரண்டு கூட்டணிகளும் ஒரு தொகுதியில் கூட வைப்பு தொகை இழக்காமல் அதன் மக்கள் செல்வாக்கை இந்த தேர்தலில் நிரூபித்து காட்டியுள்ளன.
 பெரிக்காத்தான் கூட்டணியில் பாஸ் கட்சி, பெர்சத்து, கெராக்கான் ஆகிய 3 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி தான் நடந்து முடிந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளில் 18 தொகுதியில் மக்கள் செல்வாக்கு இல்லாததால் வைப்பு தொகையை இழக்கும் அளவிற்கு படு தோல்வி அடைந்துள்ளது.
இப்படி வைப்பு தொகையை தற்காக்க முடியாத கூட்டணியின் தலைவரான ன் ஸ்ரீ முஹிடின் யாசின், அடைந்த படு தோல்வியை மறைக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
லஞ்ச ஊழல் வழக்கியில் சிக்கியுள்ள  டான் ஸ்ரீ மொகிதீன் யாசின், அவரது மகன், மருமகன், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க   வைக்க வேண்டிய சுய நலம் கருதி அன்வார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பிரதமராக இருந்த போது லஞ்சமாக பெற்ற பணத்தில் ஒரு பகுதியை கட்சிக் கணக்கில் வைத்திருந்தார். இதில் பெர்சத்து போல பாஸ் கட்சியும் பல கோடிக்கணக்கான தொகையை வைத்திருந்தன. லஞ்ச ஒழிப்பு நிறுவனம் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளில் வங்கி கணக்கையும் தற்போது முடக்கி வைத்துள்ளது.
இந்த இரண்டு கட்சிகளும் பல கோடி ரிங்கிட்டுக்களை கட்சிக் கணக்கில் வைத்திருந்தன. இந்த வங்கி கணக்குகள் லஞ்ச ஒழிப்பு நிறுவனத்தால் முடக்கி வைக்கப் பட்டுள்ளன. இந்த லஞ்ச பணத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற தீய நோக்கத்தோடும் சுய நலம் கருதியே டத்தோ ஸ்ரீ அன்வார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பொது மக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.
மேலும் 18 தொகுதியில் மக்கள் செல்வாக்கு இல்லாததால் படு தோல்வி அடைந்ததை மூடி மறைக்கவே இவ்வாறு பேசி வருகிறார் என்றும் மக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.
இந்த தேர்தல் களத்தில் போட்டியிட்ட மூன்று பெரிய கூட்டணியில் பெரிக்காத்தான் மட்டுமே மக்கள் செல்வாக்கு இல்லாததால் 18 தொகுதிகளில் வைப்புத்தொகை இழந்த கூட்டணி என்பது குறிப்பிட தக்கது.

Pengarang :