SELANGOR

ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது – சிகிஞ்சான்

ஷா ஆலம், ஆகஸ்ட் 17: நேற்று மாநிலத் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவு நிறுவனமான KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) லோராங் 1, சிகிஞ்சான் குடியிருப்பு பகுதியை சுத்தம் செய்தது.

ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் இல்லாத பகுதி என்பதை உறுதி செய்வதற்காகச் சபாக் பெர்ணம் கிளையைச் சேர்ந்த 10 அதிகாரிகளை துப்புரவு பணி திட்டத்தில் ஈடுபடுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“சபாக் பெர்ணம் மாவட்டச் சுகாதார அலுவலகம் ஏற்பாடு செய்த இந்நடவடிக்கையின் மூலம் சிலாங்கூரில் உள்ள பகுதிகளில் நல்லிணக்கத்தையும் தூய்மையையும் பராமரிக்க வேண்டும்” என்று முகநூலில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரையிலான 31 வது தொற்றுநோய் வாரத்தில் (ME31) டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மலேசிய சுகாதார அமைச்சகம் (KKM) தெரிவித்துள்ளது.

டிங்கி காய்ச்சலால் இரண்டு இறப்புகள் குறிப்பிட்ட வாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.


Pengarang :