NATIONAL

பி50 மற்றும் பி40 தரப்பினருக்கு அடிப்படை வசதிகள் கொண்ட 1,010 வீடுகள் உருவாக்கம்

கோலாலம்பூர், ஆக 17- இங்குள்ள தாசேக் சுங்கை பீசியில் 1,010 கட்டுபடி
விலை வீடுகளை உள்ளடக்கிய ரெசிடன்ஸி விலாயா மற்றும் ரெசிடன்ஸி
பிரிஹாத்தின் மடாணி வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்படுகிறது.

இன்னும் சொந்த வீட்டைப் பெறாத நடுத்தர வருமானம் பெறும் எம்40
தரப்பினர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காக
கொண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக கோலாலம்பூர் மாநகர்
மன்றம் கூறியது.

மொத்தம் 1.4 ஹெக்டர் பரப்பளவில் உருவாக்கப்படும் இந்த திட்டத்தில்
902 சதுர அடி மற்றும் 908 சதுர அடி பரப்பளவிலான 910 ரெசிடன்ஸி
விலாயா வீடுகள் நிர்மாணிக்கப்படும். இந்த வீடுகள் 300,000 வெள்ளி
விலையில் விற்கப்படும் என்று மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தது.

ரெசிடன்ஸி பெரிஹாத்தின் மடாணி திட்டத்தின் கீழ் 902 சதுர அடி
பரப்பளவிலான 100 வீடுகள் நிர்மாணிக்கப்படும். இதன் விற்பனை விலை
200,000 வெள்ளியாகும் எனவும் அது குறிப்பிட்டது.

முன்னதாக, ரெசிடன்ஸி விலாயா மற்றும் ரெசிடன்ஸி பெரிஹாத்தின்
மடாணி வீடமைப்புத் திட்டங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் இங்குள்ள டேசா தாசேக் சுங்கை பீசியில் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கோலாலம்பூர் டத்தோ பண்டார் கமாருள்ஸமான் மாட்
சாலே, அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலி
ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Pengarang :