ஸ்ரீ அமான் கிராமத்தில் பொது மண்டபம்  சாலை மேம்பாடு

செய்தி. சு சுப்பையா

சுங்கை பூலோ. ஆகஸ்ட்.20-  டேசா கோல்பீல்டு அருகிள் உள்ள ஸ்ரீ அமான் கிராம நிலை வாசால் சாலை மற்றும் பொது மண்டபம் சீரமைக்கப்பட்டது. ஜெரம் சட்டமன்ற தொகுதியின் இந்திய சமுதாய தலைவர் மணிவண்ணன் அவர்களின் அரிய முயற்சியால் இந்த மேம்பாட்டு பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

முன்பு கோல்பீல்டு தோட்டம் இருக்கும் போது இந்த ஸ்ரீ அமான் கிராமத்தில் இந்தியர்கள்  அதிகம் வசித்து வந்தனர். அக்காலக்கட்டத்தில் நிலப் பட்டா வழங்கப் படவில்லை  அப்பொழுது  இக்கிராமம் ஈஜோக் சட்டமன்றத்திற்கு உட்பட்டு இருந்தது.

2008 ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற இடைத் தேர்தலின் போது நில பட்ட  விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பெரும் போராட்டத்திற்கு பின்னர்   டான்ஸ்ரீ காலிட்  காலக்கட்டத்தில் நிலப் பட்டா வுக்கான அங்கீகாரம்  கிடைத்தது.

ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் முறையான சாலை வசதி ஏற்படுத்த  சில குடியிருப்புகள்  அகற்றப்பட்டு முறையாக வரையறைக்கு பின்  பல வசதிகளை  மேம்படுத்த திட்டம்  முன்மொழியப்பட்டது.  அதே  இடத்தில் இருந்த பொது மண்டபம் பயன்படுத்த முடியாத அளவில் இருந்தது.

நான் இந்திய சமுதாய தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு இக்கிராம இந்தியர்களுக்கு என்னால் முடிந்த சேவையை செய்து வந்தேன்.  சாலை பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இப்பிரச்னைக்கு முறையான தீர்வு வேண்டி   கோல சிலாங்கூர் மாவட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

இப்போது கைவசம் உள்ள நிதியை வைத்து நுழை வாசல் சாலையை சீரமைப்பு செய்தனர். மேலும் பழுது அடைந்து கிடந்து பொது மண்டபத்தையும் சீரமைத்து கொடுத்தனர்.

கடந்த வாரத்தில் சீரமைப்பு வேலைகளை பார்வையிட வந்த நில அலுவலக அதிகாரிகள், மேம்பாடுகளை பார்வையிட்ட பின்னர் பொது மண்டப   சாவியை மணிவண்ணனிடம் ஒப்படைத்து சென்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக தீர்வு காணப் படாமல் இருந்த சாலை மற்றும் பொது மண்டபம் பிரச்னைக்கு இந்திய சமுதாயத் தலைவர் மணிவண்ணன் அவர்களின் சீரிய முயற்சியால் தீர்வு காணப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகது.


Pengarang :