MEDIA STATEMENTNATIONAL

ஜோகூர் இடைத்தேர்தல்- இரு நடவடிக்கை அறைகளை எம்.ஏ.சி.சி. திறந்தது

புத்ராஜெயா, ஆகஸ்ட் 27 – பூலாய் நாடாளுமன்ற மற்றும்  மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களின் போது  ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை பொதுமக்கள்  வழங்குவதற்கு ஏதுவாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) ஜோகூரில் இரண்டு நடவடிக்கை  அறைகளைத் திறந்துள்ளது.

அவ்விரு நடவடிக்கை அறைகளும் நேற்று தொடங்கி வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 24 மணி நேரமும் இயங்கும் என்று எம்.ஏ.சி.சி.  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த நடவடிக்கை  அறைகளை ஜோகூர் எம்.ஏ.சி.சி. அலுவலகம் வாயிலாக 07-2316000  என்ற எண்களில் அல்லது  பத்து பஹாட் கிளை அலுவலகத்தை 07-4321982 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

புகார்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அல்லது 010-8414384 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் .

தேர்தல் பிரசாரத்தின் போது 2099 எம்.ஏ.சி.சி. சட்டம்  மற்றும்  1954ஆம்  ஆண்டு தேர்தல் குற்றச் சட்ட விதிகளை மீற வேண்டாம் என்று வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு  ஆணையம் நினைவூட்டியது.

இரண்டு இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது. மேலும் முதல் கட்ட வாக்களிப்பு செப்டம்பர் 5 ஆம் தேதியும் தேர்தல்  செப்டம்பர் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக ஜூலை 23 அன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

– பெர்னாமா


Pengarang :