SELANGOR

50 எலி பொறிகளைப் பந்திங் பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டன – கோலா லங்காட் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 29: எலி சிறுநீரால் பரவும் நோய் (லெப்டோஸ்பிரோசிஸ்) தடுக்க கோலா லங்காட் நகராண்மை கழகம் (எம்பிகேஎல்) 50 எலி பொறிகள் பந்திங் பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு விநியோகித்தது.

ஒவ்வொரு வருடமும் ஜூலை 6 அன்று கொண்டாடப்படும் உலக ஜூனோசிஸ் தினம் 2023 யை முன்னிட்டு எலிப் பொறிகள் விநியோகிக்கப்பட்டன.

“வர்த்தகர்களும் அதை வரவேற்றனர். மேலும் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளின் படி அதைப் பயன்படுத்துவோம்” என்று உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (KKM) நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் டாக்டர் அனிதா சுலைமான் இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார் என கோலா லங்காட் நகராண்மை கழகம் முகநூலில் தெரிவித்தது.


பொறிகளை விநியோகிப்பதோடு மட்டுமல்லாமல், சொற்பொழிவு, வண்ணம் தீட்டுதல் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்ற பிற நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


Pengarang :