SELANGOR

கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் லோரி பள்ளத்தில் விழுந்தது- ஓட்டுநர் படுகாயம்

ஷா ஆலம், செப் 7-  கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் லோரி 5 மீட்டர்
பள்ளத்தில் விழுந்த சம்பவத்தில் அதன் ஓட்டுநர் படுகாயங்களுக்குள்ளானார்.

இச்சம்பவம், தென் கிள்ளான் பள்ளத்தாக்கு
விரைவுச் சாலையில் பூலாவ் இண்டா டோல் சாவடி அருகே நேற்று
காலை 11.41 மணியளவில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் நிகழ்ந்த போது சமையல் எண்ணெய் ஏற்றியிருந்த அந்த
லோரி பூலாவ் இண்டா நோக்கி சென்று கொண்டிருந்ததாக சினார்
ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் நெடுஞ்சாலை ரோந்துப் பணியாளர்களிடமிருந்து
தாங்கள் தகவலைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் மீட்பு நடவடிக்கைப் பிரிவுத் துணை இயக்குநர் அகமது
முக்லிஸ் மொக்தார் கூறினார்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஓட்டுநர் லோரியின் இடிபாடுகளிலிருந்து
சொந்தமாக வெளியேறி விட்டார். உடலில் கடுமையானக் காயங்கள்
ஏற்பட்டிருந்த போதிலும் அவர் சுயநினைவுடன் காணப்பட்டார் என அவர்
தெரிவித்தார்.

காயமுற்ற அந்த லோரி ஓட்டுநர் சிகிச்சைக்காக கிள்ளான், தெங்கு
அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாகவும்
அவர் குறிப்பிட்டார்.


Pengarang :