SELANGOR

2025 வான் கண்காட்சி மிக விரிவான அளவில் நடத்தப்படும்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், செப் 7- வான் போக்குவரத்துத் துறையினருக்குப் புதிய வர்த்தக
வலையமைப்பை ஏற்படுத்தியுள்ள சிலாங்கூர் வான் கண்காட்சி
(எஸ்.ஏ.எஸ்.எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் மிகவும் மிகவும் விரிவான
அளவில் நடத்தப்படும் என்று மந்திரி புசார் கூறினார்.

இந்த கண்காட்சியை தரம் மற்றும் வருகை தரும் பார்வையாளர்கள்
எண்ணிக்கை ரீதியில் ஆசியா மற்றும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய
வான் கண்காட்சியாக வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில்
பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“சிலாங்கூர் ஆசியான் பொது விமான மற்றும் வர்த்தகத்திற்கான மையம்“
என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த 2023ஆம் ஆண்டிற்கான எஸ்.ஏ.எஸ்.
கண்காட்சியில் 117 கண்காட்சியாளர்கள் பங்கேற்றுள்ளதோடு 50
விமானங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அடுத்த ஈராண்டுகளில் இந்த கண்காட்சியை மேலும் விரிவான அளவில்
நடத்த முடியும் என நாங்கள் மதிப்பிடுகிறோம். இந்த கண்காட்சி
சுபாங்கிலிருந்து சிப்பாங்கிற்கு மாற்றப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது
என்று அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் அதிகமானோரின் பங்கேற்புடன் அதிகளவிலான
நிகழ்வுகளை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எனினும், இந்த
கண்காட்சியின் அடிப்படை நோக்கமான பொது மற்றும் வர்த்தக
விமானங்கள், இலகு ரக விமானங்கள் மற்றும் ஹெலிக்காப்டர்களை
மையமாக கொண்ட எஸ்.ஏ.எஸ். இலக்கிலிருந்து நாங்கள் விலக
மாட்டோம் என்றார் அவர்.

இன்று இங்குள்ள புக்கிட் ஜெலுத்தோங் ஸ்கைபார்க் பிராந்திய வான்
போக்குவரத்து மையத்தில் 2023ஆம் ஆண்டிற்கான எஸ்.ஏ.எஸ். கண்காட்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :