NATIONAL

போதைப் பொருள் வழக்கு- தூக்குத் தண்டனையிலிருந்து இருவர் தப்பினர்

புத்ராஜெயா, செப் 7- போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு போதைப்
பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து
இரு நபர்கள் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினர்.

திருத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து சௌ கும்
யுவேன் (வயது 37) என்ற ஆடவருக்கு 18 ஆண்டுச் சிறைத்தண்டனை
மற்றும் பத்து பிரம்படிகளையும் எஸ். இந்திரன் (வயது 31) என்ற நபருக்கு
12 ஆண்டுச் சிறை மற்றும் பத்து பிரம்படிகளையும் இங்குள்ள கூட்டரசு
நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த இருவரின் வழக்குகளை தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன்
துவான் மாட் மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ
ஹர்மிண்டர் சிங், டத்தோ ரோட்ஸாரியா பூஜாங் ஆகியோரடங்கிய அமர்வு
தனித்தனியாக விசாரித்தது.

போதைப் பொருளைக் கடத்தியதற்காக அவ்விருவருக்கும் விதிக்கப்பட்ட
மரண தண்டனையை ரத்து செய்த கூட்டரசு நீதிமன்றம், போதைப்
பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டிற்கு தண்டனை விதித்தது.

இருவருக்கு எதிரான போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டை போதைப்
பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டாக குறைப்பதற்குத் தாங்கள் செய்த
விண்ணப்பத்தை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் ஏற்றுக்
கொண்டதாக சௌ கும் யுவேனின் வழக்கறிஞர் டத்தோ ஹிஸ்யாம் தோ
போ தெக்கும் இந்திரனின் வழக்கறிஞர் டத்தோ பால்ஜிட் சிங்கும்
நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை
வழங்கியது.


Pengarang :