SELANGOR

சிலாங்கூர் கெஅடிலானின் வெள்ளி விழா கொண்டாட்டத்திற்கு 1,000க்கும் பேர் வருகை

பெட்டாலிங் ஜெயா, செப் 27:  கெஅடிலான் கட்சி எடுத்துக் கொண்ட நீண்ட  கால போராட்டம் நாட்டின் அரசியல் சூழலை மாற்றி அமைக்க உதவியது குறித்து  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விவரித்தார்.

“ஒரு சில சக்திகள்  குற்றம் சாட்டுவது போன்று, நாம் முன்னெடுத்த சீர்திருத்தங்கள்  அழிந்து புதைந்து விடவில்லை என  சிலாங்கூர் மாநில தலைமைத்துவக் குழுவின் (எம்பிஎன்) தலைவருமான  அவர் தெரிவித்தார்.

“நாட்டின் பொருளாதாரம் , அரசியல் சூழல் மற்றும்  பன்முகத் தன்மைகளுக்கு மிரட்டலாக அமையும் சில முடிவுகளை ஒத்திப் போடுவது கொள்கையை  கொன்றதாகாது. அதற்கு அரசாங்கம் ஏன்  பதவி விலக வேண்டும்?  மாற்றங்களின் எதிரிகள் அதனை விரும்புகிறார்கள்! ஏனென்றால், நம் நாட்டில் மாற்றத்தை  ஏற்படுத்த கூடிய  அரசாங்கம் இது என்று அவர்களுக்குத் தெரியும்.

“உண்மையில், அவர்கள் சீர்திருத்தத்திற்கு மிகவும் பயப்படுகிறார் மற்றும் அதைப் பற்றி கவலைப்படுகிறார். அதனால், மேலும் சீர்திருத்தம் தொடர விரும்பவில்லை,” என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மண்டபத்தில்  நடந்த கட்சியின் ஜூபிலி பேராக் கொண்டாட்டத்தின் போது ஆற்றிய  முக்கிய உரையில்  கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் அரசியல் வரலாற்றில் தேசிய அரசியல் அளவுருக்கள் மற்றும் நிலப்பரப்பை மாற்றியமைத்த இரண்டாவது மிகப்பெரிய நிகழ்வு சீர்திருத்தம் என்று அமிருடின் கூறினார்.

“டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டது போல், நன்மையை நோக்கிய மாற்றம் மலேசியர்களின் இதயங்களில் மலர்ந்து எரிந்து கொண்டே இருக்கும், அழியாது.

அதே நிகழ்வில், கெஅடிலான் துணைத் தலைவரான அமிருடின், 2023 கெஅடிலான் கிளை, பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.


Pengarang :