NATIONAL

RM630.77 மில்லியன் ஒதுக்கீட்டில் கழிப்பறைகளைப் பராமரிக்கும் ஒரு சிறிய பராமரிப்பு திட்டம் அமல்

புத்ராஜெயா, செப் 29: செப்டம்பர் 22 ஆம் தேதி வரை கல்வி அமைச்சகத்தின் (கேபிஎம்) சிறு பராமரிப்புத் திட்டங்களில் மொத்தம் 7,544 அல்லது 90.3 சதவீதம் செயல்பாட்டில் உள்ளன மற்றும் நிறைவடைந்துள்ளன என்று பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு (ICU) தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சுடன் இணைந்து, 8,354 பள்ளிகளுக்கு RM630.77 மில்லியன் ஒதுக்கீட்டில் கழிப்பறைகளைப் பராமரிக்கும் ஒரு சிறிய பராமரிப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு பொறுப்பு ஏற்றுள்ளது. இது கடந்த ஜூலை இடையில் தொடங்கப்பட்டது என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மீதமுள்ள 810 அல்லது 9.7 சதவீத திட்டங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த பராமரிப்பு திட்டம் அக்டோபர் 2023 இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது” என்று அறிக்கை கூறுகிறது.

நாட்டில் உள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 409,161 ஆசிரியர்களின் வசதிக்காக சுத்தமான மற்றும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகளை விரும்பிய மக்கள் மேம்பாடு மற்றும் நலன் மாநாட்டின் போது பிரதமர் அவர்களின் கருத்துக்கு இணங்கும் வகையில் இந்த முயற்சி உள்ளது.

“மக்கள் உணரக் கூடிய மற்றும் அனுபவிக்கக் கூடிய சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக இருக்கும். இந்த விருப்பம் மடாணி மலேசியாவை வளர்ப்பதில் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப உள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :