NATIONAL

சிலாங்கூரில் மூன்று இடங்களில் ஆரோக்கியமற்ற காற்றின் தர அளவீடுகள் பதிவு

ஷா ஆலம், செப் 29 – இன்று காலை சிலாங்கூரில் உள்ள மூன்று இடங்களில் ஆரோக்கியமற்ற காற்றின் தர அளவீடுகள் பதிவாகி உள்ளன.

அவை கோலா சிலாங்கூர், ஜோஹான் செத்தியா மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களாகும். காலை 11 மணி அளவில் அவ் விடங்கள்  முறையே 152, 139 மற்றும் 110 என்ற அளவீடுகளைப் பதிவு செய்தன,

ஜோஹான் செத்தியாவில் இன்று அதிகாலை 3 மணிக்கும், கோலா சிலாங்கூரில் காலை 7 மணிக்கும், பெட்டாலிங் ஜெயாவில் காலை 11 மணிக்கும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

சிலாங்கூரில் உள்ள மற்ற இடங்களும் ஆரோக்கியமற்ற நிலைகளுக்கு  நோருங்கிய அளவீடுகளை கொண்டுள்ளது.

ஷா ஆலமில் காலை 11 மணி அளவில் காற்றின் தர அளவீடு 100 ஆக இருந்தது, அதைத் தொடர்ந்து பந்திங்கில் 94 மற்றும் கிள்ளானில் 86 ஆக இருந்தது. மேலும், காற்றின் தர அளவீடு செரஸில் 153 ஆகவும், பத்து மூடாவில் 132 ஆகவும், தைப்பிங்கில் 106 ஆகவும் பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும் ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.


Pengarang :