SELANGOR

ஏஹ்சான் ரஹ்மா விற்பனைக் கடையை நிறுவ கோரிக்கை

ஷா ஆலம், அக் 2: பொதுமக்கள் அடிப்படைப் பொருட்களைப் பெறுவதை எளிதாக்குவதற்காக, ஒவ்வொரு தொகுதியிலும் ஏஹ்சான் ரஹ்மா (JER) விற்பனைக் கடையை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது.

இத்திட்டம் அதிகமான குடியிருப்பாளர்கள், குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறுபவர்கள் (B40) மலிவு விலையில் பொருட்களை வாங்க உதவும் என கோத்த டாமன்சாரா பிரதிநிதி முஹமட் இசுவான் அஹ்மட் காசிம் கூறினார்.

“சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் (PKPS) பொருட்களை மலிவு விலையில் விற்கும் கடைகளைத் திறந்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் அதை நிறுவினால் நன்றாக இருக்கும்.

“அதன் வழி  பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் மலிவு விற்பனை நடக்கும் இடங்களைத் தேடி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மலிவு விற்பனை திட்டம் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்களுக்கு பயனளித்துள்ளது.


மாநிலம் முழுவதும் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களை பிகேபிஎஸ் முகநூலில் அல்லது linktr.ee/myPKPS இல் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


Pengarang :