SELANGOR

ஷா ஆலம் வாகனமில்லா தினத்தை முன்னிட்டு வெப்பக் காற்று பலூனில் பறக்க பொது மக்களுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், அக் 3- ஷா ஆலம் மாநகரின் அழகை வானிலிருந்து
கண்டுகளிக்க க்கூடிய அரிதான வாய்ப்பினை ஷா ஆலம் வட்டார மக்கள்
வரும் ஞாயிற்றுக் கிழமை பெறவுள்ளனர்.

அன்றைய தினம் நடைபெறவுள்ள வாகனமில்லா தினத்தை முன்னிட்டு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளில் இந்த
வெப்பக் காற்று பலூன் சவாரியும் ஒன்றாகும் என்று ஷா ஆலம் மாநகர்
மன்றம் கூறியது.

இந்த நிகழ்வு ஷா ஆலம், செக்சன் 14, டத்தாரான் மெர்டேக்காவில் காலை
7.00 மணி தொடங்கி 11.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர்
மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரவு அறிக்கை ஒன்றில்
கூறியது.

இந்த வாகனமில்லா தினத்துடன் ஷா ஆலம் மாநகராகப்
பிரகடனப்படுத்தப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவு தினமும்
அனுசரிக்கப்படுகிறது என்று அது தெரிவித்தது.

மக்கள் மத்தியில் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும்
நோக்கில் மாநகர் மன்றம் இத்தகைய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

வெப்பக் காற்று பலூன் சவாரி தவிர்த்து ஃபன் ரைட், ஜிக்கிர் ரைட் போன்ற
நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்கும்
முதல் 800 பேருக்கு இலவமாக டி-சட்டை வழங்கப்படும்.

அன்றைய தினத்தில் பசுமை சந்தை நிகழ்வையும் மாநகர் மன்றம்
நடத்தவிருக்கிறது. பொது மக்கள் தங்களிடமுள்ள மறுசுழற்சிப்
பொருள்களை ஒப்படைத்து கூப்பன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுமக்கள் அன்பளிப்பாக வழங்கிய பயன்படுத்தப்பட்ட பொருள்களில்
தங்களுக்குத் தேவையானவற்றை இந்த கூப்பன்கள் மூலம் பெற்றுக்
கொள்ளலாம்.


Pengarang :