NATIONAL

மூன்று பகுதிகளில் காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீடுகள் ஆரோக்கியமற்றதாக உள்ளன

ஷா ஆலம்,  அக் 3: மதியம் 12 மணி நிலவரப்படி சிலாங்கூரில் உள்ள மூன்று பகுதிகளில் காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீடுகள் ஆரோக்கியமற்றதாகப் பதிவாகியுள்ளன.

அவ்விடங்கள் பெட்டாலிங் ஜெயா (119), ஷா ஆலம் (116) மற்றும் பந்திங் (114) ஆகும் என மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு அறிவித்துள்ளது.

செராஸ் (155), நீலாய் (158), சிரம்பான் (152) மற்றும் போர்ட் டிக்சன் (106) ஆகிய இடங்களிலும் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன.

0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும் ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.

சமீபத்திய காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீட்டின் நிலையை அறிய மக்கள் APIMS இணையதளத்தைப் பார்வையிடலாம்.

கடந்த மே மாதம், வானிலை மற்றும் காலநிலை அதிகாரிகள், இந்த ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் தெற்கு ஆசியான் பிராந்தியத்தில் மிகவும் கடுமையான முகை மூட்டம் நிகழும் என எச்சரித்தனர்.


Pengarang :