SELANGOR

புகைமூட்டம் காரணமாகப் பொதுமக்கள் நோய்களால் பாதிக்கப்படும் எந்த சாத்தியக்கூறுகளுக்கும் மாநில அரசு தயாராக உள்ளது

ஷா ஆலம், அக் 4: சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.எஸ்.) மூலம், புகைமூட்டம் காரணமாகப் பொதுமக்கள் நோய்களால் பாதிக்கப்படும் எந்த சாத்தியக்கூறுகளுக்கும் மாநில அரசு தயாராக உள்ளது.

ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பொதுமக்களின், குறிப்பாக வயதானவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகப் பொது சுகாதார துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் ஒப்புக்கொண்டார்.

“வானிலை மோசமடைந்தால், நோய்களால் பாதிக்கப்படக்கூடிய சிலாங்கூர் குடிமக்களுக்கு உதவ சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை தயாராக இருப்பதை உறுதி செய்வோம்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

எவ்வாறாயினும், மாநில மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையில் தொடர்ந்து தண்ணீர் குடிக்கவும், வெளியில் இருக்கும்போது எப்போதும் முகக்கவரியை அணியவும் அறிவுறுத்தினார்.

காற்றின் தரத்தின் சமீபத்திய நிலையை அறிய https://apims.doe.gov.my/home.html என்ற இணையதளத்தைப் பார்க்கும்படி பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் ஜமாலியா கூறினார்.

“சில நேரங்களில் இந்த புகைமூட்டம் தங்கள் பார்வையை மட்டுமே பாதிக்கும் என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில் அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது.

இது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும், வானிலை மோசமாக இருந்தால், குழந்தைகள் வெளியில் விளையாடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார். .

கடந்த மே மாதம், வானிலை மற்றும் காலநிலை அதிகாரிகள் இந்த ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் தெற்கு ஆசியான் பிராந்தியத்தில் மிகவும் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் என எச்சரித்தனர்.


Pengarang :