ANTARABANGSA

பேங்காக் பேராங்காடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

பேங்காக், அக் 4- இங்குள்ள சியாம் பேரெகன் மால் பேரங்காடியில் நேற்று
நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும்
பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில்
இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஐவர் காயங்களுக்குள்ளாயினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தாங்கள் நிலைமையை அணுக்கமாக
கண்காணித்து வருவதாகத் தாய்லாந்துக்கான மலேசியத் தூதர் ஜோஜி
சாமுவேல் கூறினார்.

மலேசியத் தூதரகம் நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மலேசியர்கள் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உதவி
பெறலாம் என்று அவர் சொன்னார்.

இதனிடையே, இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு சீன மற்றும்
ஒரு மியன்மார் பிரஜைகள் உயிரிழந்ததோடு மேலும் ஐவர்
காயங்களுக்குள்ளனதாக தாய்லாந்து போலீசார் கூறினர்.

இச்சம்பவத்தில் மூவர் பலியானதாக தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையில்
அந்த எண்ணிக்கை இரண்டு என பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் 14 வயதுச்
சிறுவன் துப்பாக்கியுடன் அந்த பேரங்காடியின் மூன்றாவது மாடியில்
பிடிபட்டான்.

அந்த சிறுவனுக்கு ஏற்கனவே மனநலப் பிரச்சனை இருந்தது
விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில்
பலியானவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் ஸ்ரேத்தா தாவிஷின்
அனுதாபம் தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :