SELANGOR

சிலாங்கூரில் 43,994 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஷா ஆலம், அக் 4: செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த 39வது தொற்றுநோயியல் வாரம்
வரை சிலாங்கூரில் 43,994 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இதே வாரத்தில் பதிவான சம்பவங்களை (26,335) விட இவ்வாண்டு 67.1
சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பொது சுகாதார துறை ஆட்சிக்குழு உறுப்பினர்
தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் ஐந்து இறப்புகள் பதிவான நிலையில் இவ்வாண்டு
மொத்தம் 10 இறப்புகள் பதிவாகியுள்ளன என ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

"அதிகரித்து வரும் டிங்கி காய்ச்சல் பிரச்சனைக்கு எதிரான போராட்டத்தில் சமீபத்தில்
மேற்கொள்ளப்பட்ட துப்புரவு நடவடிக்கை உட்பட பல்வேறு பிரச்சாரங்களைத்
தீவிரப்படுத்துவதன் மூலம் மாநில அரசு ஒரு முனைப்பான நிலைப்பாட்டை எடுத்து
வருகிறது.

"இருப்பினும், மக்களும் சமூகம் அக்கறையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,
ஏனென்றால் ஏற்கனவே நமக்குத் தெரிந்தபடி, டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகமாகப்
பதிவான மாநிலங்களில் சிலாங்கூரும் உள்ளது," என்று அவர் சிலாங்கூர்கினியிடம்
கூறினார்.

அனைத்து தரப்பினரும் அதிகரித்து வரும் டிங்கி காய்ச்சலைத் தீவிரமாக எடுத்துக்
கொள்ள வேண்டும் என்றும், ஏடிஸ் கொசுக்களை அழிக்க 10 நிமிடங்கள் செலவிட
வேண்டும் என்றும் ஜமாலியா கேட்டுக் கொண்டார்.


Pengarang :