SELANGOR

இரண்டு தேக்காட் கித்தா சிலாங்கூர் சலுகைகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்

ஷா ஆலம், அக் 5: மாநில அரசு நிர்வாகம் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்குள் மேலும் இரண்டு தேக்காட் கித்தா சிலாங்கூர் சலுகைகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

மாணவர்களுக்காக RM200 மதிப்பிலான கித்தா சிலாங்கூர் புத்தக வவுச்சர்கள் வழங்கப்படும். மேலும், வேலைக்குச் செல்லும் 5,000 பெண்களின் குழந்தை பராமரிப்பு செலவுகளைக் குறைக்க RM1,000 வழங்கப்படும்.

“வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிர்வாகம், மாநிலத்திற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் தொலைநோக்கைக் கொண்டுள்ளது,” என்று டத்தோ மந்திரி புசார் முகநூலில் தெரிவித்தார்.

ஜூலையில் உறுதியளித்தபடி, ஐந்து தேக்காட் கித்தா சிலாங்கூர் சலுகைகளில் மூன்றை இந்த மாதம் முதல் செயல்படுத்துவதாக நேற்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

இந்தச் சலுகையில் 426,656 குறைந்த விலை வீடுகள் மற்றும் கிராமங்களுக்கான மதிப்பீட்டு வரி விலக்குகள் இந்த ஆண்டின் இரண்டாவது தவணைக்கான RM29.415 மில்லியன் நிதியை உள்ளடக்கியது.

மாநிலத்தின் 760 இமாம்களுக்கான கொடுப்பனவுகள் RM200யிலிருந்து அதிகரித்து RM1,500 ஆகவும், 1,900 நஜிர்கள், பிலால் மற்றும் சியாக் ஆகியோருக்கான கொடுப்பனவுகளும் மாதத்திற்கு RM50யிலிருந்து அதிகரித்து RM300 (நஜீர்), RM340 (பிலால்) மற்றும் RM290 (சியாக்) ஆக உயர்த்தப்பட்டது.

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் 500 குழுக்களுக்கு RM1,000 ஊக்கத்தொகையில் RM500யை ரொக்கமாக மந்திரி புசார் அறிவித்தார்.


Pengarang :