NATIONAL

வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ளும் தயார் நிலைக்கு முன்னுரிமை

ஷா ஆலம், அக் 5: வெள்ள அபாயம் உள்ள பகுதிகள் உட்பட வடகிழக்கு பருவமழை மாற்றத்திற்கான (எம்திஎல்) விரிவான ஏற்பாடுகள் தொடர்பாக இன்று பிற்பகல் மாநில நிர்வாகத்தால் விவாதிக்கப்படும்.

மாநிலப் பேரிடர் பிரிவு உடனான சந்திப்பில், பேரிடர் அபாயம் குறித்தும், பின்தொடர்தல் நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தப்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கும் பணி சுமூகமாக நடைபெறும் என பேரிடர் எஸ்கோ நஜ்வான் ஹலிமி கூறினார்.

“நாங்கள் தயார் நிலைக்கு முன்னுரிமை அளிக்கிறோம். மேலும், மீட்பு நடவடிக்கைகளுக்கு அரசு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அதுமட்டுமில்லாமல், ஶ்ரீ மூடா போன்ற நகர்ப்புறங்களில் ஏற்படும் வெள்ளச் சம்பவங்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

“சிலாங்கூர் தன்னார்வக் குழுவின் (சேவை) உறுப்பினர்களும் தயாராக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்திற்குப் பிந்தைய பகுதிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளுக்காக இந்தக் குழுவின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

வெள்ளத்தை சமாளிக்க 10,000 அடிப்படை உதவிப் பேக்கட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு இரட்டிப்பாகும் என்றும் நேற்று, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தீயணைப்புப் படை, ராணுவம் மற்றும் குடிமைத் தற்காப்புப் படையிடம் கருவிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டது. மேலும் உள்ளூர் அதிகாரிகள் உண்மையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பயிற்சியாக உருவகப்படுத்துதலை நடத்துகின்றனர்.


Pengarang :