MEDIA STATEMENTNATIONAL

 டிஜிட்டல் மயமாக்கல் மானியங்களை வழங்க அரசாங்கம் RM100 மில்லியனை ஒதுக்குகிறது

ஷா ஆலம், அக் 13: 20,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் RM5,000 வரையிலான டிஜிட்டல் மயமாக்கல் மானியங்களை வழங்க அரசாங்கம் RM100 மில்லியனை ஒதுக்குகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை (பிஎம்கேஎஸ்) ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வணிக மாதிரிகளுக்கு மாற ஊக்குவிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.

“இந்த மானியம் விற்பனை, சரக்கு மற்றும் டிஜிட்டல் கணக்கியல் அமைப்புகளை மேம்படுத்த பயன்படுகிறது. பேங்க் நெகாரா மலேசியா சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வணிக உற்பத்தியை அதிகரிக்க RM900 மில்லியன் கடன் நிதி வழங்குகிறது.

2024 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது ஷாப் மலேசியா ஆன்லைன் திட்டத்தின் மூலம் 40 மில்லியன் ரிங்கிட் சிறு தொழில்முனைவோருக்கு வழங்கப்படுகிறது என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

ஒவ்வொரு மாநில சட்டமன்றத்தில் உள்ள டிஜிட்டல் பொருளாதார மையத்தில் RM25 மில்லியன் மொத்த ஒதுக்கீட்டில் இணையத்தில் பொருட்களை விற்பனை செய்யும் சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவாக தொடர்ந்து பலப்படுத்தப்படும்.


Pengarang :