NATIONAL

இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு வெ.5 கோடி மானியம்

கோலாலம்பூர், அக் 14– நாட்டிலுள்ள பதிவு பெற்ற இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 5 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வழிபாட்டுத் தலங்களில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று நேற்று 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.

இது தவிர, தேசிய கலை, இலக்கியப் படைப்புகளை காட்சிப்படுத்தும், மேடை நாடகங்களுக்கு ஊக்குவிப்பு வழங்கும் மற்றும் இளைஞர்களிடையே தலைசிறந்த படைப்புகளை வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் அமைப்புகளுக்கு உதவ ஐந்து கோடி வெள்ளி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

சபா மற்றும் சரவாவில் கலை, கலாசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கும் சயாமிய சிறுபான்மைக் குடியினர் போன்ற தரப்பினரின் மொழிகளை காப்பதற்கும் பேராக் இன மற்றும் கலாசார மையத்தை நிறுவவும்  ஒரு கோடி வெள்ளி ஒதுக்கீட்டை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது என அவர் தெரிவித்தார்


Pengarang :