SELANGOR

நவம்பரில் கிள்ளான் நகராண்மை கழகம்  மாநகராட்சியாக மாற்றப்படும்

கிள்ளான், அக் 16: கிள்ளான் நகராண்மை கழகம்  மாநகராட்சியாக நவம்பர் 23 ஆம் தேதி மாற்றப்படும் என்று அதன் தலைவர் தெரிவித்தார்.

சமூகத்தின் வசதிக்காகப் பொது வசதிகளைக் குறிப்பாகச் சாலைகளை, தனது தரப்பு தற்போது தீவிரமாக மேம்படுத்தி வருவதாக நோரைனி ரோஸ்லான் தெரிவித்தார்.

” அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, யாங் டி-பெர்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவிடம் இருந்து சான்றளிக்கும் கடிதத்தைப் பெற நாங்கள் காத்திருக்கிறோம்.

“பின்னர் நாங்கள் நவம்பர் 23 அன்று அரசிதழில் வெளியிடுவோம், மேலும் அதிகாரப்பூர்வமாக எம்பிகே மாநகராட்சி என்று அழைக்கப்படும்.

இதற்கிடையில், மாநகராட்சி அந்தஸ்தை பெறுவதற்கு முன், பொது மக்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வைத்திருக்க எம்பிகே தீவிரமாக செயல்படுவதாக அவர் விளக்கினார்.

“மாநகராட்சி அந்தஸ்துக்கு ஏற்ப பொது வசதிகள் தரத்தை சிறப்பாக வைத்திருக்க வேண்டும்.

“அவற்றில், பூலாவ் இண்டா சாலையை மேம்படுத்த RM3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குடியிருப்பு பகுதியின் பராமரிப்புக்கு நாங்கள் RM3.8 மில்லியன் ஒதுக்கியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

சிலாங்கூரில் உள்ள மூன்று நகராண்மை கழகங்கள் மாநகர அந்தஸ்தைப் பெற்றுள்ளன. அவை ஷா ஆலம் மாநகராட்சி, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மற்றும் சுபாங் ஜெயா மாநகராட்சி ஆகும்.


Pengarang :