SELANGOR

சோலார் விளக்குகளை நிறுவுவதற்காக RM22,000 செலவிடப்பட்டது – பண்டார்  உத்தாமா தொகுதி 

ஷா ஆலம், அக் 20: தாமான் BU 12 இல் 15 சோலார் விளக்குகளை நிறுவுவதற்காகப் பண்டார்  உத்தாமா தொகுதியில் மொத்தம் RM22,000 செலவிடப்பட்டது.

பசுமை தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் சிறு மானியத் திட்டத்தின் மூலம் RM17,000 மாநில அரசின் பங்களிப்பு என்று சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

“இதற்கிடையில், விளையாட்டு மைதானம் மற்றும் அப்பகுதியில் சுற்றி சோலார் விளக்குகளை நிறுவுவதற்குப் பண்டார் உத்தாமா BU 12 குடியிருப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையும் அளிக்கப்பட்டது.

“இங்கே சோலார் விளக்குகளை நிறுவுவது இந்தப் பகுதியைப் பாதுகாப்பானதாக்குவதுடன் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

“மின்சாரம் இல்லாமல் பல ஆண்டுகள் நீடிக்கும் இந்த சோலார் விளக்குகள் நிறுவப்படுவதை நாங்கள் ஆதரிக்கிறோம், ஏனெனில் அவை சூரிய மண்டலத்தின் மூலம் ஒளியை உற்பத்தி செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.

சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பயனடைய முடியும் என்று ஜமாலியா கூறினார்.

முன்னதாக, சிலாங்கூர் முழுவதிலும் உள்ள சங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்குப் பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் சிறு மானியங்களுக்காக மாநில அரசாங்கம் RM1.3 மில்லியனை ஒதுக்கியது.


Pengarang :